நமக்கு தெரியாத விஷயங்களின் பதில்களை அறிய உடனடியாக கூகுல் செய்து பார்க்க நம்மில் பெரும்பாலோர் பழகிவிட்டோம். கூகுளில் பல ஆபத்துகளும் உள்ளன. அதன்படி எக்காரணத்தைக் கொண்டும் கூகுள் வழியாக சில விடயங்களைத் தேட வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.
ஆன்லைன் பேங்கிங் முறையில், உங்கள் வங்கியின் சரியான அதிகாரப்பூர்வ யுஆர்எல் ஆனது உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை கண்டுபிடிக்க வெறுமனே உங்கள் வங்கி பெயரை டைப் செய்து ஆன்லைன் பேங்கிங் என்று தேடுவதை தவிர்க்கவும். ஏனெனில் கூகுளில் பல போலியான ஆன்லைன் பேங்கிங் வலைத்தளங்கள் உள்ளன. பெரும்பாலான போலியான வலைத்தளங்கள் ஆனது குறிப்பிட்ட வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
அதேபோல், கஸ்டமர் கேர் என்பது மிகவும் பிரபலமான ஆன்லைன் மோசடிகளில் ஒன்றாகும். இம்மாதிரியான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் போலியான வணிக பட்டியல்களையும், கஸ்டமர் கேர் எண்களையும் வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பார்கள். அதை உண்மை என்று நம்பி அவர்களின் கையில் சிக்கும் வாடிக்கையாளர்களிடம் விலாசம் அல்லது வங்கி விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் தொடங்கி, பணம் பறிப்பு வரையிலான மோசடிகள் கட்டவிழ்க்கப்படும்.
மேலும், நீங்கள் எதாவதொரு மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்ய விரும்பினால், வெறுமனே அதன் பெயரை டைப் செய்து கூகுள் வழியாக தேட வேண்டாம். அது ஆன்ராய்டு ஆப் என்றால் கூகுள் ப்ளே-விற்கு செல்லவும் அல்லது அது ஐஓஎஸ் ஆப் என்றால் ஐபோன்களுக்கான ஆப் ஸ்டோருக்கு செல்லவும்.
சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளிலிருந்து லாகின் செய்யாதீர்கள். கூகுள் மூலம் லாகின் செய்வது பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், முதலீடு செய்யும் போது கூகுள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனை பெறுவதை தவிர்க்கவும்.
அதேபோல், கூகுளில் ஆன்டி வைரஸ் ஆப்ஸ் அல்லது மென்பொருளைத் தேடுவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அங்கு ஏராளமான போலி தயாரிப்புகள் உள்ளன. அசல் தயாரிப்புகளை அடையாளம் காண்பது கடினம்.